அன்பென்றாலே…

ஜூன் 10, 2008

யாரோ குப்பதைத் தொட்டில் கொட்டிய பூக்களை

ரசித்தபடி மனசுக்குள் கேட்டேன்

அன்பென்றாலே…

அந்த பூக்கள் மலர்ந்த முகமாய்

என் காதில் இரகசியம் கசிவதுப்போல்

“அது இறைவன் மார்பில் நிறைந்திருக்கும்

அது அவளுக்கு அதிகமாய் இருக்கும்”

பூக்கள் பின்னிய புதிரை

தரையில் படர்ந்த நிழல்

கொஞ்சம் வெளிச்சம் தெளித்தது

“அவள் நிழல் போலிருப்பாள்

வாழ்க்கையோடு நிறைந்திருப்பாள்”

யார் அவள்?

மனசில் கேள்வி எழுப்ப

நுகரும் காற்று நின்று போனால்

இன்னொரு கேள்வி எழுப்ப

உடனே பயம் படர்ந்தது

காற்றின் கருணையில் நமக்கு சுவாசம்

அதுப்போல் அவளும்

அவள் ஆரவணைப்பில் இவ்வுலகும்

என மெல்ல மெல்ல

குழந்தை சிரிப்பில் மகிழ்ச்சி மலர்வதுப்போல்

அவளை அடையாளம் கண்டுக்கொண்டேன்

யாதர்த்தமாய் வானம் பார்த்தேன்

பால் நிலவு

அவளின் சாந்த முகமோ

அங்கேயிருந்து மூன்று வின்மீன்கள்

எனக்காக விழுவதுப்போல்

அதில் அன்பென்றாலே

‘அம்மா’ என

உயிர் எழுதும் எழுத்துக்கள்

பொறித்திருக்கலாம்